நவுறுவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அகதிச்சிறுவர்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டபின்னர் மீண்டும் நவுறு தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்களே தவிர, ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படமாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
நவுறுவிலுள்ள அகதிச்சிறுவர்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்று அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் Dutton இப்படியொரு அறிக்கையை விடுத்திருக்கிறார்.
நவுறு தீவிலுள்ள எவரையம் ஆஸ்திரேலியாவினுள் அனுமதிப்பதன் மூலம் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகுப்பயணங்களை ஊக்குவிப்பதற்கு ஆஸ்திரேலியா ஒருபோதும் தயாராக இல்லை. அதனை தெளிவாகக்கூறிக்கொள்ளவிரும்புகிறோம். நவுறுவிலுள்ள அகதிகள் மூன்றாம் நாட்டுக்கு அனுப்பப்படுவார்களே தவிர, ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படமாட்டார்கள். குறிப்பாக, நறுவிலுள்ள அகதிச்சிறுவர்களின் பெற்றோர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று இனங்காணப்பட்டால், அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படமாட்டார்கள் - என்று Dutton மேலும் தெரிவித்துள்ளார்.
