நவுரு முகாமிலிருந்த சிரியா நாட்டு அகதியொருவர் இந்த வாரம் கம்போடியாவில் குடியேற்றப்பட்டுள்ளதாக கம்போடியாவின் அகதிகள் துறையின் தலைவரை மேற்கோள் காட்டி Phnom Penh Post பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரது வருகையை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
"We don't comment on individual cases," a spokeswoman from the Ministry of Immigration and Border Protection said.
அத்துடன் அங்கு குடியேற்றப்படும் நவுரு அகதிகளுக்கு உதவவென ஆஸ்திரேலிய அரசினால் $15.5 மில்லியன் டாலர்கள் அங்குள்ள The International Organisation for Migration அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பும் இந்த வருகையை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அரசு கம்போடியாவுடன் இங்குள்ள அகதிகளை அங்கு குடியேற்றும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தது. அதற்காக கம்போடியாவுக்கு 40 மில்லியன் டாலர் நிதியுதவியளித்தது.
இதுவரை 7 அகதிகள் அங்கு போய் தாம் வாழ்வதாக உடன்பட்டனர். ஆனால் பின்னர் அந்த ஏழு பேரில் நால்வர் தமது சொந்த நாடுகளுக்கே திரும்பிவிட்டனர்.
Two Iranian men, an Iranian woman and a man from Myanmar returned to their home countries in late 2015 and early 2016. Two of the men remaining in Cambodia are from Syria, while the other is from Myanmar.
