SKIP TO MAIN CONTENT

நவுறுவிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்றும் ஆஸ்திரேலியாவுக்கு!

The island of Nauru
The island of Nauru Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பல்வேறு அழுத்தங்களின் பிரகாரம் நவுறு தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பல அகதி குடும்பங்களை கொண்டுவருகின்ற ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த புதன் கிழமை தமிழ் குடும்பம் ஒன்றும் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருப்பதாக அறியமுடிகிறது.

தகப்பனும் மகளும் இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம்  இவர்களுடன் லெபனான் நாட்டைச்சேர்ந்த ஒரு குடும்பமும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கட்சிக்குள்ளேயே அகதிகள் விவகாரம் தொடர்பாக - குறிப்பாக நவுறு அகதிகள் தொடர்பாக - மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள பிரதமர் Scott Morrison இதற்கு விரைவாக முடிவொன்றை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

இதுதொடர்பில் லேபர் கட்சி மற்றும் எதிர்த்தரப்பிலிருந்து வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடனும்கூட அவர் பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவுறு தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மருத்துவர்கள் எடுத்துவந்துள்ள புகைப்படங்கள் தற்போது பல்வேறு ஊடகங்களில் வெளியாகிவருகின்றமையும் ஆஸ்திரேலிய அரசுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now