ஒவ்வொரு ஆண்டும் 9 இரவு, 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி ஆரம்பித்துள்ள நிலையில் இப்பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இத்திருவிழா முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை மையப்படுத்தியும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகியோருக்காகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தப்பின்னணியில் பல்காலச்சார ஆஸ்திரேலியாவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிவரும் இந்துக்களுக்கு தமது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source: ScoMo