SKIP TO MAIN CONTENT

மெல்பன் உணவகங்களில் செலவு செய்ய $100 வரை கூப்பன்

மெல்பன்வாசிகள் உணவங்களில் சென்று உணவருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய இலவச கூப்பன் திட்டம் ஒன்றை விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது.

Melbourne food vouchers
Source: AAP

1 min read

Published

Updated

By Selvi


Skip to article content

உணவகங்களில் செலவிடுவதற்கான இந்த இலவச கூப்பன் திட்டத்திற்கென 7.4 மில்லியன் டாலர்கள் எதிர்வரும் மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் என விக்டோரிய மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.

 

இத்திட்டதின் கீழ் மெல்பன் நகர் உணவகங்களில் செலவிட மேலதிகமாக ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது.

 

மெல்பன் நகர உணவகங்களில் சென்று உணவு உட்கொள்பவர்களின் உணவுக்கான கட்டணத்தில் 20 சதவீதம் மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.  இந்த திட்டத்தின் கீழ் $10 டாலர்கள் முதல் $100 டாலர்கள் வரை மட்டுமே மீளப் பெற்றுக்கொள்ளலாம். அதாவது $100 டாலர்கள் மீளப் பெற்றுக்கொள்ள உங்கள் உணவிற்கான செலவு $500 டாலர்களாக இருத்தல் வேண்டும்.

 

மெல்பன் நகரம் மேலும் மிகவும் விரும்பதக்க நகரமாக புத்துயிர் பெற எதிர்வரும் மாநில நிதிநிலை அறிக்கையில் மேலும் $100 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட உள்ள்து.

 

விக்டோரியா மாநில நிதிநிலை அறிக்கை எதிர்வரும் மே 20ஆம் தேதி சமர்பிக்கப்பட உள்ளது.

 

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now