குயின்ஸ்லாந்து மாநிலம், பிரிஸ்பனில் சமூகப் பரவல் ஊடாக ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில Premier Annastacia Palaszczuk அறிவித்துள்ளார்.
பிரிஸ்பனின் Stafford பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இந்நபருக்கு எவ்வாறு நோய்த்தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை எனவும் இதுகுறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த நபருக்கு கடந்த திங்கள் முதல் நோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவர் நேற்றையதினம் தன்னை சோதனைக்குட்படுத்தியபோது கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Young தெரிவித்தார்.
அதேநேரம் Landscaper-ஆக பணிபுரிந்த இந்நபருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னதாக-நோய்த்தொற்றுடன்-கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர் பல இடங்களுக்கு சென்றிருந்ததாகவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதுடன் சோதனைக்குட்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர இந்நபர் சென்றுவந்த இடங்கள் குறித்த சில விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
- March 20, at 11:00am, he was in the Carindale shopping centre and visited quite a few shops
- March 20, Baskin and Robbins ice cream store at Everton Park
- March 21, 9:00am the fresh food market stall at Gasworks in Newstead
- March 21, 12:20pm, Mumma's Italian Waterfront restaurant at Redcliffe
- March 22, worked outside as a landscaper in Paddington
- March 22, 12:20pm drive-through at Guzman and Gomez in Stafford
- March 22, 1:00pm Bunnings at Stafford
- March 25, Aldi in Stafford for 10 minutes.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
