SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் 286 தொழில்துறைகளில் வேலைக்கு ஆட்களில்லாமல் திண்டாட்டம்!

புதிய National Skills Commission அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

IMG_5838.JPG

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

நாட்டிலுள்ள சுமார் 286 தொழில்துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக National Skills Commission அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரண்டுமடங்காகும்.

கடந்த ஆண்டு சுமார் 153 தொழில்துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது இவ்வெண்ணிக்கை 286 ஆகியுள்ளதையடுத்து, நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொழில்துறைகள் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

அதிக தேவையுடைய பணியாளர்களின் பட்டியலில் செவிலியர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

அதேநேரம் கட்டுமான மேலாளர்கள், குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் மோட்டார் மெக்கானிக்குகளும் மிக அதிகளவில் தேவைப்படுகின்றனர்.

இதேவேளை ஆகஸ்ட் 2022 வரையிலான காலப்பகுதியில், வேலை வெற்றிடங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 309,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளதாக National Skills Commission அறிக்கை கூறுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய குழுவொன்று அமைக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் கோவிட் பரவலின் எதிரொலியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now