கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் 29 ஆயிரம் ஆஸ்திரேலியர்களை கிறிஸ்மஸிற்கு முன்னர் அழைத்துவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் விமானப் பயணங்கள் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கும் என்பது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து தங்கள் விவரங்களை பதிவுசெய்துவிட்டு காத்திருக்கும் சுமார் 36 ஆயிரம் பேரில் எண்ணாயிரத்து எழுபது பேர் முன்னுரிமை அளிக்கப்படவேண்டியவர்களாக உள்ளனர் என்றும் கிறிஸ்மஸிற்கு பின்னரும் நாடு திரும்ப விருப்பமுள்ளவர்களுக்கான விமான சேவையை நடத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வெளிநாட்டு விமானசேவைகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், வெளிநாடுகளிலிருந்து சுமார் 39 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது புள்ளி விவரங்களை ஆதாரம் காண்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் பின்வரும் எண்ணிக்கையிலான பயணிகளை அனுமதிக்கின்றன-
NSW: வாரத்திற்கு 3,000 பயணிகள்
Vic: வாரத்திற்கு 1,120 பயணிகள் (டிசம்பரில் ஆரம்பமாகிறது)
SA: வாரத்திற்கு 600 பயணிகள் (தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது)
Qld: வாரத்திற்கு 1000 பயணிகள்
WA: வாரத்திற்கு 1,025 பயணிகள்
Tas: 450 பயணிகள் (கிறிஸ்மஸிற்கு முன்னதாக)
ACT: 360 பயணிகள் (கிறிஸ்மஸிற்கு முன்னதாக)
Share
