SKIP TO MAIN CONTENT

சந்தைக்கு வரவிருக்கும் புதிய சாதனங்கள் எவை? அவை என்ன செய்யும்?

CES Tech show என்பது வருடாவருடம் அமெரிக்காவில், Las Vegas Convention Centre இல் நடைபெறும் நுகர்வோருக்கான electronics பாவனைப்பொருட்களின் கண்காட்சியாகும். சந்தையில் எதிர்காலத்தில் புதிதாக அறிமுகமாகவிருக்கும் electronic பொருட்கள், புதிய தொழில்நுட்பங்கள் என்பன இந்த கண்காட்சியில் வெள்ளோட்டமாக இடம்பெறுவது வழக்கம்.

Gadget Show Dassault Systemes
People participate in a virtual twin exhibit at the Dassault Systemes booth during the CES tech show, Wednesday, Jan. 10, 2024, in Las Vegas. (AP Photo/John Locher) Source: AP / John Locher/AP

3 min read

Published

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

Consumer technology association ஆல் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் உலகெங்கிலுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் இந்தவருடம் சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்.

Innovators என்ற புதிய சாதனங்களை/ கருவிகளைக் கண்டுபிடிப்பவர்கள், அதன் patent என்ற உரிமத்தைப் பெற்று உற்பத்திசெய்பவர்கள் அல்லது தயாரிப்பவர்கள், Media என்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், Influencers என்ற இதன் தயாரிப்பில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள், Visionaries என்ற எதிர்காலச்சந்தைக்கு வரக்கூடிய புதிய தொழில்நுட்பம் பற்றி எதிர்வு கூறுபவர்கள், மற்றும் பிரதானமாக நுகர்வோர் - அதாவது பாவனையாளர்கள் ஆகிய அனைவரையும் ஒரே கூரையின் கீழ்இணைக்கும் அமைப்புத்தான் CES- Consumer Electronics Show.

 

CES 2024
EMBARGOED TO 0001 SUNDAY JANUARY 7 Undated file photo of the CES show in Las Vegas. Artificial intelligence (AI) and car tech are predicted to be the key topics at the world's largest consumer electronics show, which begins in Las Vegas on Monday. CES draws around 100,000 attendees to see some of the world's biggest tech firms - including Sony, Google, Samsung and others - unveil new gadgets and discuss key trends in the industry. Issue date: Sunday January 7, 2024.. See PA story TECHNOLOGY CES. Photo credit should read: Martyn Landi/PA Wire Credit: Martyn Landi/PA/Alamy

Foldable TV -மடித்துவைக்கக் கூடிய தொலைக்காட்சி , generation 5 AI powered think book -மடிக்கணினி, Horizon max 4K projector, on செய்யப்படாதபோது வெறும் ஜன்னல் கண்ணாடி போல மாறும் LG signature OLED T Transparent TV என்று நூற்றுக்கணக்கான புதியகருவிகள் சாதனங்கள் அங்கு இடம்பெற்றாலும், இம்முறை அங்கு விசேடகவனத்தைக்கவர்ந்ததும், பிரதான இடத்தைப்பிடித்துக்கொண்டதும், முதியோருக்கான உடல்நலத்தைப் பேண உதவும், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படக்கூடிய உபகரணங்களாகும்.

மனிதனின் முதுமை அவனுக்கு வலியையும், நோயையும் உடல் உள தளர்ச்சியையும் தனிமையையும் கொண்டுவந்து சேர்க்கிறது. எளிமையாகவும் ஆனால் துல்லியமாகவும் உடல்நிலையைக்கணிப்பதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவுடன்கூடிய உபகரணங்களை AARP American Association of Retired Persons என்ற அமைப்பின் அனுசரணையுடன் Samsung health house என்ற காட்சி அரங்கு பார்வைக்கு வைத்திருந்தது.

 

Gadget Show Dassault Systemes
A convention goer participates in a virtual twin exhibit at the Dassault Systemes booth during the CES tech show, Wednesday, Jan. 10, 2024, in Las Vegas. (AP Photo/John Locher) Source: AP / John Locher/AP

பாதுகாப்பான rail - பாதுகாப்பு சட்டங்களுடனும் குறட்டைவிடுவதைத்தடுக்கும் தொழில்நுட்பத்துடனும், Biometric sensors என்ற உடல்நிலையைக்காட்டும் கருவிகளும் இணைக்கப்பட்ட கட்டில் -smart bed அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தவிர Heart rate and Blood Oxygen levels என்பவற்றைக்காட்டும் toilet seats என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Bathroom scale -எடையைக்கணிக்கும் கருவியில் பல அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சாதாரண bathroom scale ஐப்போலத்தோன்றும் இது ஒருவர் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் கீழே விழுந்து கடுமையாகப் பாதிக்கப்படக்கூடுமா என்று சொல்லும். உங்கள் balance சமநிலையை அடிப்படையாக வைத்து இந்தக்கணிப்பு செய்யப்படுகிறது. முதியவர்கள் கீழே விழுவதற்கு carpets - கம்பளங்கள் பிரதான காரணம் என்று சொல்லப்படுகிறது. விழக்கூடிய சாத்தியம் உள்ளவர்கள் வீட்டிலுள்ள carpetகளை அகற்றிவிடலாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.

 

Gadget Show LG
The newly unveiled LG Signature OLED T transparent tv is seen during an LG news conference before the start of the CES tech show Monday, Jan. 8, 2024, in Las Vegas. (AP Photo/Ryan Sun) Source: AP / Ryan Sun/AP

முதியவர்களுக்கான தொழில்நுட்பச்சந்தையின் வருடாந்த வருமானம் அமெரிக்காவில் மட்டும் 12 trillion ஆஸ்திரேலிய டாலர்கள்என்று சொல்லப்படுகிறது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த தொகை தொடர்ந்து அதிகரிக்கும்.

Home based health care என்ற துறையில் AI பிரதான பங்குவகிப்பதாக Samsung health இன் Global head of global health Dr. Hon Pak கூறுகிறார். HealthCare- நலப்பராமரிப்பு இப்போது வீடு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மாறுகிறது; முதியவர்களின் பிரச்சனைகளைத்தீர்க்க உதவும் சாதனங்களின் தேவை அதிகமாகிறது. நாம் அதற்குப் போதுமான ஆயத்தத்தில் இல்லை. தொழில்நுடபமே இதற்கு உதவமுடியும் என்று அவர் கூறுகிறார்.

இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த Anura Magic Mirror பற்றி இந்த smart mirrorஐ வடிவமைத்துள்ள Nuralogix Corporation இன் தலைவர் Lindsay Brennan விளக்கினார். இந்த கண்ணாடி உங்கள் முகத்தை 30 நிமிட video வில் பதிவு செய்யும். இதன்மூலமாக சருமத்திற்கு அடியில் ஓடும் இரத்த ஓட்டத்தை கணித்து உடல்நிலை தொடர்பான கணிப்புகளைச்செய்யும் என்று அவர் சொல்கிறார்.

இதன்மூலமாக blood pressure- இரத்த அழுத்தம், pulse - நாடித்துடிப்பு, breathing rates சுவாச விகிதம், facial skin age- முக, சரும முதிர்ச்சி, mental stress - மன அழுத்தம் போன்றவற்றை கணிக்க முடியும். அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் type 2 diabetes, heart attack and stroke என்பவை ஏற்படும் சாத்தியமுள்ளதா என்பதையும் அது கணிக்கும்.

 

World's First Smart Mirror For Mental Wellness Uses AI To Boost Your Confidence And Mood
**VIDEO AVAILABLE. CONTACT INFO@COVERMG.COM TO RECEIVE.** Mirror, mirror on the wall, who is the most mindful of them all? A health-tech company have created the world's first smart mirror for mental well-being. Unveiled at CES 2024, Baracoda's BMind serves as a health companion capable of discerning moods and assisting in stress management. BMind offers personalised recommendations and tailored experiences based on a user's mental state, providing a seamless, touch-free experience through gesture recognition, voice commands, and intent detection. Effectively managing stress, alleviating anxiety, and addressing insomnia all necessitate a supportive tool that assists individuals in maintaining a positive mindset and adopting a proactive approach to their well-being. Unlike smartphone applications, BMind seamlessly integrates into any bathroom, allowing users to assess their mental states and select recommended exercises and activities to improve their moods. BMind collects information without the need for intrusive technology and assists users in incorporating mindfulness practices into their daily routines, even helping to alleviate feelings of loneliness through an immersive experience utilising light, sound, and visuals. BMind utilises Generative AI for conversation and coaching interactions, as well as Natural Language Processing (NLP) for sentiment analysis. It identifies various emotional states and adapts to the user's mood by offering light therapy sessions and generating customised mindfulness exercises such as guided meditation and self-affirmations. Through the CareOS interface, BMind harnesses state-of-the-art artificial intelligence (AI) and employs Computer Vision and Large Language Models to interpret facial expressions, gestures, and language. BMind is built upon CareOS, an operating system that enables manufacturers to create and power smart mirrors more efficiently than ever before, converting any screen into a smart mirror. It also permits third-party providers to integrate their applications for display within the mirror's interface. Among the 40 providers already compatible with CareOS, BMind partners with ThrivePal, an AI-powered coach that designs tailored programs for personalized self-improvement, and Inclusive Brains, a proprietary blend of generative AI and neurophysiology that enables devices to sense and adapt to people's real-time emotions. CareOS is a privacy-focused platform that stores health and personal data locally and never shares it with any party without the explicit request and consent of the user. "Technology that can monitor subtle changes in health has the potential to enhance the quality of millions of lives," said Thomas Serval, CEO of Baracoda. "Our mental state significantly affects our overall well-being. Including mood in our daily wellness assessments represents a significant step towards redefining preventative health." BMind's technology was recently honoured with a 2024 Consumer Electronics (CES) Innovation Award in the smart home category. When: 11 Jan 2024 Credit: Baracoda/Cover Images **EDITORIAL USE ONLY. MATERIALS ONLY TO BE USED IN CONJUNCTION WITH EDITORIAL STORY. THE USE OF THESE MATERIALS FOR ADVERTISING, MARKETING OR ANY OTHER COMMERCIAL PURPOSE IS STRICTLY PROHIBITED. MATERIAL COPYRIGHT REMAINS WITH STATED PHOTOGRAPHER AND/OR SUPPLIER.** Credit: Baracoda/Cover Images/Cover Images

Beam O என்பது மற்றொரு கருவி. கையில் எடுத்துச்செல்லக்கூடிய இந்தக்கருவியிலுள்ள sensorகள் நான்கும் electrocardiography என்ற முறையில் ஒருவரின் இருதய செயல்பாட்டை ஆய்ந்து atrial fibrillation இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும். இத்துடன் pulse oximeter, சுவாசப்பை எவ்வளவு சீராக oxygenஐ இரத்தத்திற்கு கடத்துகிறது என்பதையும் கணிக்கும்.

 

இங்கு காட்சிப்படுதப்பட்ட smart stethoscope பற்றி Livia Robic product manager for Withings beam O விளக்கினார். இது ஒரு digital stethoscope. வைத்தியருடன் தொலைவிலிருந்து உரையாடும்போது heart and lung soundsஐ டாக்டருக்கு stream செய்யலாம். இது ஒரு contactless thermometer ஆகவும் செயல்படும் என்று அவர் விளக்கினார். சுமார் 375 ஆஸ்திரேலிய டாலர் விலையில் வீட்டில் உபயோகிக்கக் கூடிய stethoscope இது.

 

Evie ring என்ற பெண்களுக்கான மோதிரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி அதைத் தயாரிக்கும் Movano health என்ற நிறுவனத்தின் துணைத்தலவர் Stacy Salvi விளக்கினார். செயற்கை நுண்ணறிவு இந்த Evie ring அல்லது மோதிரத்தின் பிரதானமான பகுதியாகும். மாதவிடாய், mood and energy- மனநிலை, சக்தி போன்ற தரவுகள் பதியப்பட்டு இந்த தரவுகள் நித்திரை, இதய நலம் போன்ற தரவுகளோடு இணைக்கப்பட்டு தமது உடல்நிலை பற்றிய தகவல்களைப் பெறமுடியும்.

 

எதிர்காலத்தில் Health tech என்ற நலத்துறைத்தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடையப்போகிறது என்பதைக்கோடிட்டு காட்டும் நிகழ்வாக CES tech show அமைந்திருக்கிறது.

 

செயற்கை நுண்ணறிவின் துணையோடு, இதைவிடப் புரட்சிகரமான innovative, personalised - புதியதும் தனிநபர் சார்ந்ததுமான கருவிகள் நமது நலமான மகிழ்ச்சியான வாழ்க்கையக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வரவிருக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now