SKIP TO MAIN CONTENT

சைக்கிளோட்டிகளுக்கு மிக அருகில் சென்றால் தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா?

Cyclists
Source: Cyclists

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சைக்கிளோட்டிகளுக்கு மிக அருகில் வாகனமோட்டிச் செல்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும்வகையில் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இதன்படி 60 km/h அல்லது அதற்கு குறைவான வேக கட்டுப்பாடு உள்ள வீதிகளில் செல்பவர்கள், சைக்கிளோட்டியிலிருந்து ஆகக்குறைந்தது 1 மீட்டர் இடைவெளிவிட்டுச் செல்ல வேண்டும்.

60km/h-க்கு அதிக வேகக்கட்டுப்பாடு உள்ள இடங்களில் ஒன்றரை மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும்.

இதனை மீறி சைக்கிளோட்டிகளுக்கு மிக அருகில் வாகனமோட்டிச் செல்பவர்கள் தண்டப்பணமாக 330 டொலர்களைச் செலுத்தும் அதேநேரம் 2 demerit புள்ளிகளையும் செலுத்த நேரிடும்.

கடந்த 2 வருடங்களாக இப்புதிய சட்டம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதாகத் தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாநில பெருந்தெருக்கள் அமைச்சர் Melinda Pavey, இதன் ஊடாக 15 வீதமான சைக்கிள்-வாகன விபத்துக்கள் குறைக்கப்பட்டதாகவும், இதையடுத்து குறித்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்ற சட்டம் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் ஏற்கனவே அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now