SKIP TO MAIN CONTENT

விமானநிலையமூடாக எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலிய விமானநிலையங்களினூடாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் தம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் ஜுன் 30 திகதி முதல் பயணிகள் தம்முடன் எடுத்துச் செல்லும் carry-on luggage-இல் சில வகை Powder பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.

Organic powder வகைக்குள் அடங்கும்    

  • Powdered baby formula
  • Powdered food
  • Coffee
  • Protein powder
  • Flour, spices, sugar
  • Most cosmetics
  • Epsom salt உள்ளிட்ட  பொருட்களை பயணிகள் தம்முடன் carry-on luggage-இல் எடுத்துச் செல்லலாம்

ஆனால் Inorganic powder வகைக்குள் அடங்கும்

  • Salt
  • Salt scrub
  • Sand
  • Some talcum powders
  • Some powdered deodorant
  • Certain foot powders
  • Powdered detergent and cleaning products

போன்றவற்றை ஒருவர் 350 கிராம்களுக்கு மேல் தனது carry-on luggage-இல் எடுத்துச்செல்ல முடியாது.

மேலும் இத்தகைய பொருட்களை கொண்டு செல்பவர் screening பகுதியில் அவற்றைத் தனியாக பரிசோதிப்பதற்கென கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது check-in luggage-களில் powder பொருட்களை எந்தளவு வேண்டுமானாலும் கொண்டுசெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு cosmetic face powders, blushers, eyeshadows போன்ற பொருட்களை check-in luggage-களிலேயே கொண்டுசெல்வது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now