விக்டோரிய மாநில ரயில் சேவைகள் பல இன்றிலிருந்து புதிய நேர அட்டவணையின்கீழ் செயற்படவுள்ளன.
விக்டோரியாவின் metropolitan மற்றும் regional ஆகிய ரயில் சேவைகள் பலவற்றின் நேர அட்டவணை இன்றிலிருந்து மாற்றப்படுவதாகவும் பேருந்துகளுக்கான நேர அட்டவணையும் படிப்படியாக மாற்றப்படவுள்ளதாகவும் Public Transport Victoria(PTV) தெரிவித்துள்ளது.
இதுதவிர விக்டோரியாவின் ரயில் போக்குவரத்து வலையமைப்பில் புதிதாக 280 metropolitan மற்றும் 170 regional ரயில் சேவைகள் இணைக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் அதிகளவானோர் பயணம் செய்கின்ற peak hour-க்கு வெளியே பயணம் செய்பவர்களுக்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாகவும் PTV அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த 3 மாதங்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 மணி மற்றும் இரவு 7 மணிக்குப் பின்னர் பயணம் செய்பவர்களுக்கு ரயில் கட்டணத்திலிருந்து 30 வீத தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
நீங்கள் பயணம்செய்யும் ரயில் சேவை தொடர்பிலான புதிய நேரஅட்டவணையைப் பார்வையிட ptv.vic.gov.au இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
