SKIP TO MAIN CONTENT

சிகரெட் பிடித்துவிட்டு காரிலிருந்து வீசியெறியும் ஓட்டுநர்களுக்கான அபராதம் அதிகரிப்பு!

New tough penalties on lit cigarette tossers from moving cars in NSW
New tough penalties on lit cigarette tossers from moving cars in NSW Source: Press Association

1 min read

Published

Updated


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிகரெட் பிடித்துவிட்டு அதன் அடித்துண்டினை காரிலிருந்து வெளியே வீசும் ஓட்டுநர்கள் மிகப்பெரும் அபராதத்தை எதிர்கொள்ளவுள்ளனர்.

குறித்த குற்றத்திற்கான புதிய தண்டனையை நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் மற்றும் அவசர சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் David Elliot நேற்று அறிவித்தார்.

இதன்படி புகைப்பிடித்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் சிகரெட் துண்டினை கார் கண்ணாடி வழியாக வீசுபவர்கள் 5 demerit புள்ளிகளை இழக்கவுள்ளனர்.

அதேநேரம் total fire ban-தகனத்தடை விதிக்கப்பட்ட நாட்களில் இவ்வாறு நடந்துகொள்பவர்கள் அந்த இடத்திலேயே 10 demerit புள்ளிகளை இழக்கும் அதேநேரம் சுமார் 11 ஆயிரம் டொலர்கள் வரையான தண்டப்பணமும் செலுத்த நேரிடும்.

தற்போது இதற்கான தண்டப்பணம் 660 டொலர்களாகவும் தகனத்தடை நாட்களில் 1320 டொலர்களாகவும் காணப்படுகின்றது. 

10 demerit புள்ளிகள் அபராதம் என்பது- P plate அல்லது L plate ஓட்டுநர்களைப் பொறுத்தவரை சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த இடத்திலேயே இழப்பதற்கு ஒப்பானதாகும்.

இச்சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல்  நடைமுறைக்கு வரவுள்ளது.

இவ்வாறு எரிந்துகொண்டிருக்கும் சிகரெட் துண்டினை வெளியே வீசுவதால் காட்டுத்தீ ஏற்பட்ட சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டியுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் மற்றும் அவசர சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் David Elliot, இந்த ஆண்டு மட்டும் எரிந்துகொண்டிருக்கும் சிகரெட் துண்டுகளை வெளியே வீசிய சுமார் 200 பேர் பிடிபட்டதாக குறிப்பிட்டார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now