SKIP TO MAIN CONTENT

அதி வேகமாகப் பறந்த விமானம் – புயலுக்கு நன்றி!

விமானப் பயணம் செய்பவர்களுக்குக் கால தாமதம் பழகிப் போன விடயம். ஆனால், எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னரே விமானம் சென்றடைந்து விட்டால் அளப்பரிய மகிழ்ச்சியான விடயமாக மாறிவிடும். சியாரா (Ciara) புயலில் மாட்டிக் கொண்ட ஒரு விமானம், குறிப்பிட்ட நேரத்திற்கு 102 நிமிடங்கள் முன்னரே தரையிறங்கி, பயணிகளைக் கொண்டாட வைத்துள்ளது.

BA 747-436
BA 747-436 Source: Supplied

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்டு இலண்டன் நகரம் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) போயிங் (Boeing) 747-436 விமானம், மணிக்கு 1,327 கிமீ என்ற வேகத்தை எட்டி சாதனை புரிந்துள்ளது.  அதற்குக் காரணம், சியாரா புயல்.  புயலின் வேகமான காற்று விமானத்தை விரைவாகப் பறக்க வைத்துள்ளது.  வழமையாக 6 மணி 38 நிமிடங்கள் எடுக்கும் இந்த விமான பயணம், 4 மணி 56 நிமிடத்திலேயே ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தை சென்றடைந்தது.

இதற்கு முன்னர், இதே பயணத்தை 5 மணி 13 நிமிடங்களில் பறந்து நோர்வே விமானம் (Norwegian Boeing 787-9 Dreamliner) சாதனை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம், ஒலியின் வேகத்திலும் குறைவான வேகத்தில் பறக்கும் விமானங்கள் செய்த சாதனை.  தற்போது செயலிழந்துள்ள கொன்கோர்ட் (Concord) விமானங்கள், நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்டு 2 மணி 53 நிமிடங்களில் இலண்டன் நகரை சென்றடையும் வல்லமை கொண்டிருந்தன.  ஆனால், நவீன பயணி விமானங்கள் ஒலியின் வேகத்தின் 85% வேகத்தில் தான் பயணிக்கின்றன என்பது நோக்கத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now