SKIP TO MAIN CONTENT

சிட்னி புதுவருட வாணவேடிக்கை நிகழ்வை நிறுத்தக்கோரி கையெழுத்துவேட்டை!

Fireworks explode over the Sydney Harbour during New Year's Eve celebrations in Sydney, Monday, December 31, 2018. (AAP Image/Brendan Esposito) NO ARCHIVING
Source: AAP

1 min read

Published


Skip to article content

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தை சூழ எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ காரணமாக இம்முறை புதுவருட தினத்தன்று சிட்னி மாநகரில் வழக்கமாக இடம்பெறும் நள்ளிரவு வாணவேடிக்கை - பட்டாசு நிகழ்வை  ரத்துச்செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் மாநில வானத்தில் ஏற்கனவே போதுமானவு புகைமண்டலம் நிறைந்துபோயிருக்கிறது, வாணவேடிக்கை நடத்தி அதன் ஊடாகவும் வளிமண்டலத்தை மாசுபடுத்த தேவையில்லை-என்று இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக இந்த வாணவேடிக்கை நிகழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதியை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் காட்டுத்தீயை நிறுத்துவதற்கு பாடுபடுகின்ற தீயணைப்புப்படை வீரர்களுக்கும் காட்டுத்தீயிலிருந்து வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு பாடுபட்டுக்கொண்டுள்ள விலங்குகள் நல அமைப்பினருக்கும் கொடுக்கவேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் சிட்னி மாநகரில் இடம்பெற்ற வாணவேடிக்கைக்கு 58 லட்சம் டொலர்கள் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Change.org இணையத்தின் ஊடாக நடதப்பட்டுவருகின்ற இந்த கையெழுத்துவேட்டைக்கு இதுவரை 165,000 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now