SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்து எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

கோவிட் பரவல் காரணமாக சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டை இறுக்கமாகப் பேணிவந்த நியூசிலாந்து அரசு தற்போது அதில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

Qantas and Air New Zealand planes
New Zealand has announced a fast-tracked border reopening plan Source: Getty Images

2 min read

Published

Updated


Skip to article content

குறிப்பாக நியூசிலாந்து செல்வோருக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள்  கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சர்வதேச பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் விடுதிகளில் தனிமைப்படுத்தும் நடைமுறையைப் பேணிவரும் நியூசிலாந்து அரசு, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், பெப்ரவரி 27ம் திகதி முதல் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்வகையில், பின்வரும் ஐந்து கட்டங்களாக கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ளது.

முதற்கட்டம்: பெப்ரவரி 27 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 முதல், ஆஸ்திரேலியாவிலிருந்துவரும் நியூசிலாந்து குடிமக்கள் மற்றும் தகுதிவாய்ந்த சில குறிப்பிட்ட பிரிவினர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகலாம்.

இரண்டாம் கட்டம்: மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 முதல், அத்தியாவசியத்துறைகளில் பணிபுரிபவர்கள், skilled workers மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என வெளிநாடுகளிலிருந்து நியூசிலாந்து திரும்புவற்கு தகுதியுள்ள சில பிரிவினர், நியூசிலாந்தை வந்தடைந்தவுடன் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகலாம்.

மூன்றாம் கட்டம்: 12 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 முதல், விசா நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சுமார் 5000 வெளிநாட்டு மாணவர்கள் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

நான்காம் கட்டம்: ஜுலை மாதமளவில் ஆஸ்திரேலியர்கள் உட்பட விசா இல்லாமல் நியூசிலாந்து செல்வதற்குத் தகுதியுள்ள அனைவரும் அங்கு செல்லமுடியும்.

ஐந்தாம் கட்டம்: அக்டோபர் முதல், நியூசிலாந்து விசா வைத்திருக்கும் அனைவரும் அங்கு செல்ல முடியும்.

தற்போதையநிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 10 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், இது மார்ச் மாதமளவில் 7 நாட்களாக குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை விடுதிகளில் தனிமைப்படுத்தும் நடைமுறை தொடரும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now