நியூசிலாந்தின் White Island பகுதியில் எரிமலைச் சீற்றம் ஏற்பட்டதில் அப்பகுதியில் இருந்த ஒருவர் பலியாகியதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இன்று மதியம் 2.15 மணியளவில் White Island பகுதியிலுள்ள எரிமலை குமுற ஆரம்பித்தாகவும் அப்போது குறித்த பகுதியிலோ அல்லது அதற்கு அருகிலோ ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.
இதுவரை உலங்குவானூர்தி உதவியுடன் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் Bay of Plenty-இலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் White Island எரிமலையைப் பார்வையிடும் அதேநேரம் தினந்தோறும் குறித்த பகுதிக்கான சுற்றுலா சேவைகளும் நடத்தப்படுவது வழக்கம்.
நியூசிலாந்து எரிமலை சீற்றத்தையடுத்து விமானப்பயணங்கள் எதுவும் ரத்துச்செய்யப்படவில்லை எனவும் வழமை போன்று சேவைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
