SKIP TO MAIN CONTENT

Nine Network ஊடகத்துடன் இணைந்தது Fairfax Media!

Channel 9 & Fairfax merger
Channel 9 & Fairfax merger Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாகிய Nine Network மற்றும் Fairfax Media ஊடக நிறுவனம் ஆகிய இரண்டும் இணைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டு நிறுவனத்தின் 51.1 வீதமான பங்குகள் Nine Network-க்கு சொந்தமானது என்பதால் Fairfax Media நிறுவனம் தனது பெயரை இழந்து, Nine என்ற பெயரின்கீழ் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள அச்சு ஊடகங்கள் - தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் வானொலிகள் பலவற்றுக்கு தாய் நிறுவனமாக செயற்படுகின்ற Fairfax Media பழம்பெரும் ஊடக அமைப்பாகும்.

Fairfax Media வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊடகங்களை வாங்கியும் விற்றும் வந்துள்ளது. அந்த வகையில், The Sydney Morning Herald, The Age, Domain ஆகிய ஊடகங்களின் ஊடாக அநேகருக்கு தெரிந்திருந்த Fairfax Media, கடந்த காலங்களில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது.இதன் விளைவாக, ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமளவுக்கு நிலைமை பெருங்குழப்பங்களுக்குள்ளாகியிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் Fairfax Media நிறுவனத்தை பொறுப்பேற்பதாக Nine Network அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு ஊடக நிறுவனங்களினதும் பணிப்பாளராக Nine Network நிறுவன அதிபரே செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now