தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு 6 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கான தனது எல்லையை தற்காலிகமாக மூடுவதாக விக்டோரியா அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் விக்டோரியா-தெற்கு ஆஸ்திரேலியா எல்லை மூடப்படுவதாகவும் அத்தியாவசிய தேவைகளின்நிமித்தம் விக்டோரியாவுக்குள் வருபவர்களுக்கு permit வழங்கும் நடைமுறை சனிக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மாநில Premier Daniel Andrews அறிவித்தார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலின் தீவிரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு சுகாதார நிலைமைகள் அனுமதிக்கும்பட்சத்தில் எல்லை மீளத்திறக்கப்படும் எனவும் Daniel Andrews மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தெற்கு ஆஸ்திரேலியாவில் இன்றையதினம் புதிதாக எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
