SKIP TO MAIN CONTENT

Nomophobia: ஆஸ்திரேலியர்களில் 99.2 சதவீதமானவர்களுக்கு பீடித்துள்ள பீதி!

A woman uses her mobile phone on the street.
A whopping 99 per cent of Australians are addicted to their phones, according to a study. Source: Sipa USA Dinendra Haria / SOPA Images/Sip

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவில் 99.2 வீதமான மக்கள் கைத்தொலைபேசியை பிரித்துவிட்டால் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற அகப்பீதி கொண்டவர்களாக உள்ளார்கள் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அதிமுக்கிய ஆய்வொன்றின் மூலம் அறியவந்துள்ளது.

Nomophobia என்று அழைக்கப்படும் இந்த பீதிநிலை இளையவர்களைத்தான் அதிகம் ஆட்கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BehaviourWorks Australia-வினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண்கள்தான் பெண்களைவிட அதிகம் இந்த பீதியால் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டாயிரத்து 838 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 43 சத வீதமானவர்கள் நாளொன்றுக்கு மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக கைத்தொலைபேசியில் தங்களது நேரத்தை செலவிடுவதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

அதிலும் ஆய்வில் கலந்துகொண்ட ஒருவர் கூறும்போது, கைத்தொலைபேசி இல்லாவிட்டால் தான் நிர்வாணமாக உணர்வதாக தெரிவித்துள்ளார்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now