SKIP TO MAIN CONTENT

Oz Lotto: முதன்முதல் வாங்கிய சீட்டிலேயே 5 கோடி வென்ற சிட்னி பெண்!

Oz Lotto
Oz Lotto Source: Oz Lotto

1 min read

Published


Skip to article content

வாழ்நாளிலேயே முதன்முறையாக அதிஷ்டலாபச்சீட்டை வாங்கிய North Sydney பெண்மணி ஒருவர் ஐந்து கோடி டொலர்களை வென்றிருக்கிறார்.

கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற Oz Lotto சீட்டிழுப்பில் அவர் இந்த அதிஷ்டப்பணத்தை பெற்றிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருபோதும் அதிஷ்டலாபச்சீட்டினை கொள்முதல் செய்து அனுபவமில்லாதபோதும், முதல் தடவையாக வாங்கிய சீட்டு தனக்கு கோடிகளை அள்ளித்தந்திருப்பது மகிழ்ச்சியாகவும் அதிர்ச்சியாகவுமிருக்கிறது என்று அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப்பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறேன் என்று தன்னால் தற்போது சிந்திக்கமுடியாதுள்ளதாகவும், நிச்சயமாக தான் தொடர்ந்து வேலைக்கு போகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முதல் டிவிஷனில் வெற்றிபெறுகின்ற பத்தாவது நபர் இவராகும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now