Circa Boulevarde என்ற தெருவில், Toyota Camry ஒன்றை ஓட்டிச் சென்றவர் Seatbelt அணியவில்லை என்பதை அவதானித்த சாலைப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்த வாகனத்தை நிறுத்தி, ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்தது மட்டுமின்றி, வாகனத்தையும் சோதனையிட்டார்கள்.
வாகனத்தினுள் $75,000 ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
39 வயதான ஓட்டுனரைக் கைது செய்து, Castle Hill காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர் மேல் வழக்குப் பதிவானது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டையும் சோதனை செய்ய உத்தரவு பெறப்பட்டு, Bella Vistaவிலுள்ள தொடர் அடுக்குமாடி குடியிருப்பில் தேடுதல் நடத்தப்பட்டது.
அங்கே மேலதிகமாக $650,000 கண்டெடுக்கப்பட்டது.
குற்றச் செயல் மூலம் இந்தப் பணம் இவரது கைகளுக்கு வந்துள்ளது என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த இந்த வாகன ஓட்டி, Parramatta உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையின் பின்னர் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
