கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் என்ன?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பலருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இது வழமையான சளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்றாலும் உடனே குடும்ப வைத்தியரை அல்லது Healthdirectஐ 1800 022 222ல் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று மோசமானால் சுவாச பாதிப்பான நிமோனியா வர வாய்ப்புள்ளது.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இவ்வைரஸ் பரவுமா?
கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிவரும் திரவத்துளிகளினால் இவ்வைரஸ் மற்றவருக்கு தொற்றும் வாய்ப்புள்ளது .
கொரோனா வைரஸ் தாக்கினால் குணமடைய முடியுமா? இவ்வைரஸிற்கான தடுப்புமருந்து உள்ளதா?
கொரோனா வைரஸிற்கான தடுப்புமருந்து தற்போது இல்லை. இவ்வைரஸிற்கென பிரத்தியேக சிகிச்சைகளும் எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இவ்வைரஸ் தொற்றை கண்டறிந்து சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.
பல சமயங்களில் இத்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் தானாகவே குணமாகும் ஆனால் இத்தொற்றினால் சிக்கலான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
என்னையும் என் குடும்பத்தையும் இவ்வைரஸ் தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாப்பது?
சரியான சுகாதார முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.
சோப்பு உபயோகித்து கைகளை 20 வினாடிகள் தண்ணீரால் அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.
இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது மூக்கு மற்றும் வாயை நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.
சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
சுகவீனமுற்றவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல் வேண்டும்.
Share
