கொரோனா தொற்றுடன் பத்துநாட்களாக டாக்ஸி ஓட்டியதாக கருதப்படும் நபர் ஒருவர் சிட்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரிலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படும் நபர்களை தேடி பாரிய வலை வீச்சினை சிட்னி சுகாதரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபரது டாக்ஸியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 18 ஆம் திகதிக்கும் இடையில் பயணித்தவர்களை தேடிப்பிடிப்பதில் சுகாதாரத்துறையினர் முழு அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சிட்னியில் Moorebank, Bankstown, Chipping Norton, Liverpool, Lidcombe, Warwick Farm, Milperra ஆகிய இடங்களுக்கு இந்தக்காலப்பகுதியில் பயணித்திருப்பது மாத்திரமல்லாமல், தனது டாக்ஸியில் பயணித்தவர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு Liverpool வைத்தியசாலைப்பகுதியிலிருந்துதான் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Campbelltown Golf Club at Glen Alpine on September 16 between 2pm and 4.30pm in the TAB area;
Milton Ulladulla Ex Servos Club on September 12 between 2pm and 6.15pm;
Carlo’s Italian Restaurante Bar & Seafood, Ulladulla on September 12 between 8pm and 9.30pm;
Bannisters Pavilion Rooftop Bar & Grill, Mollymook on September 13 between 12.30pm and 2.15pm
-போன்ற இடங்கள் உட்பட Moorebank, Bankstown, Chipping Norton, Liverpool, Lidcombe, Warwick Farm, Milperra ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதிக்கும் 18 ஆம் திகதிக்கும் இடையில் பயணித்தவர்கள் உடனடியாக தங்களை கோவிட் சோதனைக்கு உள்ளாக்குமாறு சுகாதரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
