நியூ சவுத் வேல்ஸ்-விக்டோரியா மாநிலங்களுக்கிடையிலான எல்லை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நாளை 23ம் திகதி திறக்கப்படும் என NSW Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
கடந்த ஜுலை ஆரம்பம் முதல், விக்டோரியா மாநிலத்தவர்கள் பயணம் செய்யமுடியாதபடி நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தனது எல்லையை மூடியிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவலை வெற்றிகரமாக முறியடித்துள்ளமையைத் தொடர்ந்து விக்டோரிய மாநிலத்தவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு ஏதுவான வகையில் தமது எல்லையைத் திறப்பதாக Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
அதேபோன்று ACT-யும் விக்டோரியாவுக்கான தனது எல்லையை நாளை முதல் திறக்கிறது. இதன்படி விக்டோரியாவிலிருந்து ACT வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
