நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்கான முக்கிய காரணம் இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிந்தமையே என மெல்பேர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் காட்டுத்தீ காரணமாக இதுவரை 3 பேர் பலியாகிய அதேநேரம் 300 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பும் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் காட்டுத் தீ ஏற்படுவதற்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என காட்டுத்தீ உருவாக்கம் தொடர்பில் ஆய்வு நடத்துபவரும் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக கடமையாற்றுபவருமான Trent Penman தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பரில் முடிய வேண்டிய தென்மேற்குப் பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடித்ததால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வரவேண்டிய குளிர்ந்த காற்று தடைபட்டு சூடான மற்றும் உலர்ந்த காலநிலை நீடித்ததே காட்டுத் தீ ஏற்பட காரணம் என்றும் Trent Penman கூறியுள்ளார்.
