கன்பரா வழியாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் வந்திறங்கிய நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த இரண்டு பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் விடுத்த தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அங்கிருந்து சென்று அவர்களுக்காக வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தப்பியோடியவர்களை அறிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தருமாறு பொலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச்சம்பவம் நேற்று புதுவருட தினத்தன்று முற்பகல் 11 மணியளவில் மெல்பேர்ன் விமானநிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூ சவுத் வேல்ஸிலிருந்து விக்டோரியாவுக்குள் நுழைபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தவேண்டிய கடுமையான அறிவுறுத்தலை விக்டோரிய சுகாதார திணைக்களம் விடுத்திருப்பதுடன், இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லை நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share
