NSW வெள்ள அவசரநிலை: வானிலை சீரடைகிறது, ஆனால் வெள்ள அபாயம் தொடர்கிறது!

Floodwater from the swollen Hawkesbury river is seen at Windsor, north west of Sydney, Thursday, March 3, 2022. A developing low pressure system is expected to intensify overnight impacting Sydney with heavy rain that could cause flash flooding and potent

Floodwater from the swollen Hawkesbury river is seen at Windsor, north west of Sydney, Source: AAP/Dan Himbrechts

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் இன்றையதினம் வானிலை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல இடங்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Singleton-னின் தென்மேற்கே Bulga-வில் உள்ள Wollombi Brook மற்றும் குயின்ஸ்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள Mungindi-யில் உள்ள Barwon ஆற்றில் பெரும் வெள்ளம் தொடர்கிறது.

Maitland-இல் Hunter ஆற்றில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆற்றின் நீர்மட்டம் உச்சத்திற்கு அருகில் உள்ளது.

Putty வீதியில் உள்ள Colo ஆற்றிலும் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

வெளியேற்ற உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட சிட்னி புறநகர் பகுதிகளின் விவரங்களடங்கிய புதுப்பிக்கப்பட்ட வரைபடம் இங்கே கிடைக்கிறது

சாலைகள் மூடப்பட்டிருந்தால் அவை தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்: https://www.livetraffic.com/

NSW மாநில அவசர சேவை இணையதளத்தைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணில் அழைக்கவும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் தமது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வேறு தங்குமிடங்களில் தங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது முடியாவிட்டால், evacuation centres  இதற்கென உருவாக்கப்பட்டுள்ளன.


நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மாநில அவசர சேவை வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்:

  • செல்லப்பிராணிகள், அத்தியாவசிய பொருட்கள், குளிர்தாங்கும்  உடைகள், மருந்துகள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • மற்ற தனிப்பட்ட உடைமைகளை பாதுகாப்பான/உயர்ந்த இடத்திற்கு மாற்றவும்.
  • நெரிசலான சாலைகளைத் தவிர்க்கும்வகையில் விரைவாகப் புறப்படுங்கள்.
  • நீண்டநேரம் பயணம் செய்யவேண்டியிருப்பதால் குடிநீர் மற்றும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இந்தத் தகவலை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளவும். முடிந்தால் மற்றவர்களுக்கு உதவவும்.
Floodwaters instructions in English
Source: NSW Multicultural Health Communication Service

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand