NSW வெள்ள அவசரநிலை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அடுத்த 24 முதல் 48 மணி நேரங்களுக்கு மோசமான வானிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள பின்னணியில், வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் எச்சரிக்கைகளால் 60,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

A member of the public walks through floodwater after the Georges River burst its banks in Picnic Point south-west of Sydney, Tuesday, March 8, 2022.

A member of the public walks through floodwater after the Georges River burst its banks in Picnic Point south-west of Sydney, Tuesday, March 8, 2022. Source: AAP Image / Bianca De Marchi

நியூ சவுத் வேல்ஸில் கடுமையான வானிலை காணப்படும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பின்வரும் பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன:

  • Sussex Inlet
  • Kempsey
  • St Georges Basin
  • Camden
  • Croki
  • Picnic Point
  • Pleasure Point
  • Sandy Point
  • Warwick Farm
  • Moorebank
  • Milperra
  • Lansvale
  • Holsworthy
  • Georges Hall
  • Chipping
  • East Hills
Manly அணை நிரம்பிவழியத் தொடங்கியுள்ளதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம். பிந்திய தகவல்களுக்கு State Emergency Service website-ஐப் பார்க்கவும்.

Freshwater Surf Life Saving Club வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.


நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மாநில அவசர சேவை வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்:

  • செல்லப்பிராணிகள், அத்தியாவசிய பொருட்கள், குளிர்தாங்கும்  உடைகள், மருந்துகள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • மற்ற தனிப்பட்ட உடைமைகளை பாதுகாப்பான/உயர்ந்த இடத்திற்கு மாற்றவும்.
  • நெரிசலான சாலைகளைத் தவிர்க்கும்வகையில் விரைவாகப் புறப்படுங்கள்.
  • நீண்டநேரம் பயணம் செய்யவேண்டியிருப்பதால் குடிநீர் மற்றும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இந்தத் தகவலை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளவும். முடிந்தால் மற்றவர்களுக்கு உதவவும்.

வெளியேற்ற உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட சிட்னி புறநகர் பகுதிகளின் விவரங்களடங்கிய புதுப்பிக்கப்பட்ட வரைபடம் இங்கே கிடைக்கிறது

சாலைகள் மூடப்பட்டிருந்தால் அவை தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்: https://www.livetraffic.com/

NSW மாநில அவசர சேவை இணையதளத்தைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணில் அழைக்கவும்.

Share

Published


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand