சிட்னி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அவசர சேவை பிரிவு ஊழியர்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சில இடங்களில் 20 மில்லிமீட்டர் அளவு பெரும் மழை பெய்த காரணத்தினால் சாலைகளில் வெள்ளம் நிரம்பி பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அபாயகட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாக State Emergency Service சேவையின் அதிகாரிகள் கவலை வெளியிட்டனர். குறிப்பாக, கனமழை காரணமாக Grafton எனுமிடத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு குடும்பம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் பெய்யும் கனமழை நாளை வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 74 நாட்களாக NSW மாநிலத்தின் Shoalhaven பிராந்தியத்தின் Currowan எனுமிடத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயை தீயணைப்புப்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த காட்டுத்தீ 499,621 ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்துகொண்டிருந்தது என்றும், 74 நாட்களாகஎரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயில் 312 வீடுகள் எரிந்து நாசமடைந்தன என்றும் கூறப்படுகிறது.
