SKIP TO MAIN CONTENT

சர்ச்சைக்குரிய 2 பில்லியன் டொலர் விளையாட்டு மைதானத் திட்டம் கைவிடப்பட்டது!

ஹோம்புஷ் நகரில் அமைந்துள்ள ANZ ஸ்டேடியத்தை முற்றிலும் தகர்த்தெறிந்துவிட்டுப் புதிதாக விளையாட்டு மைதானம் கட்டப் போவதாகக் கூறிவந்த NSW அரசாங்கம், அதற்குப் பதிலாக, அதனைப் புதுப்பிக்கும் வேலையை மட்டும் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

NSW Premier Gladys Berejiklian has reportedly backed away from the ANZ Stadium redevelopment plans.
NSW Premier Gladys Berejiklian has reportedly backed away from the ANZ Stadium redevelopment plans. Source: AAP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP, SBS



Skip to article content

சிட்னியிலுள்ள இரண்டு பிரதான விளையாட்டு அரங்கங்களை 2 பில்லியன் டொலர் செலவில் கட்டப் போவதாக NSW அரசு அறிவித்திருந்தது.  ஆனால், இது குறித்து பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள்.  "மைதானத்துக்கு முன் கல்விக் கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகள் தேவை" என்ற பதாகையுடன் எதிர்க்கட்சியான Labor கட்சித் தலைவர் Luke Foley மாநிலத்தை சுற்றுப்பயணம் செய்தார். 

இந்த எதிர்ப்புகள் காரணமாக இருக்கின்ற மைதானங்கள் இரண்டையும் இடித்து, புதிதாகக் கட்டுவதற்குப் பதிலாக,  ஹோம்புஷ் நகரில் அமைந்துள்ள ANZ விளையாட்டு அரங்கத்தைப் புதுப்பிக்கும் வேலையை மட்டும் செய்யப் போவதாகவும், ஆனால், Moore Park என்ற இடத்திலுள்ள Allianz அரங்கு மீண்டும் கட்டப்படும் என்றும் NSW அரசு அறிவித்துள்ளது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now