Explainer

இந்திய ஓட்டுனர் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் NSW இல் கார் ஓட்டும் சோதனையில் வெற்றிபெற வேண்டும்

சர்வதேச ஓட்டுநர் உரிமம் (Driver’s Licence) வைத்திருப்பவர்கள் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டும் சட்ட அனுமதியை NSW மாநிலஅரசு அதிரடியாக மாற்றுகிறது. மூன்று மாதங்களுக்கு மேல் NSW மாநிலத்தில் ஒருவர் வசிப்பதானால், அவர் NSW ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும் என்று NSW மாநிலஅரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Going on a vacation - Stock image

Driving, Car, Teenager, Happiness Source: Getty / Deepak Sethi/Getty Images

தற்போது NSW மாநிலத்தில் வசிக்கும் சுமார் 220,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் குறிப்பாக மாணவர் விசா அல்லது தற்காலிகமாக வேலை செய்யும் விசா அல்லது சுற்றுலா பயணி விசா வைத்திருக்கின்றவர்கள் NSW ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக தங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி காலவரையறையின்றி வாகனம் ஓட்டி வருகின்றனர். எனவே வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் நவம்பர் மாதத்திற்குள் தங்களது கார் ஓட்டும் லைசென்சை NSW மாநில அரசு தரும் ஓட்டுனர் உரிமம் - லைசென்சாக மாற்றவேண்டும். இதனால் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (Driver’s Licence) வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுகின்ற பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் NSW உரிமங்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதிக்குமுன் மாறுவர் என்று அரசு எதிர்பார்க்கிறது.

சீனா, இந்தியா மற்றும் நேபாளம் போன்ற "அங்கீகரிக்கப்படாத" நாடுகளைச் சேர்ந்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதிக்குப்பின் “ஓட்டுநர் அறிவுத் தேர்வு, ஆபத்து உணர்தல் சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை” Driver Knowledge Test, a Hazard Perception Test and a Driving Test ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
Transport for NSW

இந்தியா, நேபாளம், மற்றும் சீனா போன்ற நாடுகளை பின்னணியாகக்கொண்ட 120,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஓட்டுநர்கள் நவம்பர் மாதத்திற்குள் ஓட்டுநர் உரிமத் தேர்வை எழுதி புதிய NSW ஓட்டுனர் உரிமம் பெறவேண்டும் அல்லது நவம்பர் ஒன்றாம் தேதிக்குப்பின் “ஓட்டுநர் அறிவுத் தேர்வு, ஆபத்து உணர்தல் சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை” ஆகியவற்றைச் செய்தபின்னரே இவர்கள் வாகனம் ஓட்டும் உரிமம் - லைசென்ஸ் பெற இயலும்.

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற "அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின்" ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருக்கின்றவர்கள் தங்கள் உரிமங்களை NSW லைசென்சாக ஆக தொடர்ந்து மாற்ற முடியும். ஆனால் சீனா, இந்தியா மற்றும் நேபாளம் போன்ற "அங்கீகரிக்கப்படாத" நாடுகளைச் சேர்ந்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதிக்குப்பின் “ஓட்டுநர் அறிவுத் தேர்வு, ஆபத்து உணர்தல் சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை” Driver Knowledge Test, a Hazard Perception Test and a Driving Test ஆகியவற்றைச் செய்ய வேண்டும். ஆனாலும் அவர்கள் 120 மணிநேர ஓட்டுநர் பயிற்சி எடுத்திருக்கவேண்டும் எனும் பதிவைச் செய்ய வேண்டியதில்லை.
Woman pulled over by traffic cop
Young woman pulled over by police officer on the road. Credit: South_agency/Getty Images


NSW மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை 2000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஓட்டுநர்கள் தங்களின் மோசமான சாலை நடத்தைகளினால் வெளிநாட்டு உரிமத்துடன் வாகனம் ஓட்டும் சலுகையை இழந்தனர். குறிப்பாக, தவறிழைக்கும் ஓட்டுனருக்கு தரப்படும் அபராதம் மற்றும் டிமெரிட் புள்ளிகளை வெளிநாட்டு உரிமத்தில் வாகனம் ஓட்டுகின்றவர்களுக்கு தருவதில் சிக்கல் இருப்பதால் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர் . சில சந்தர்ப்பங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமற்போவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் நவம்பர் முதல் பெருமளவு குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு மேல் NSW மாநிலத்தில் ஒருவர் வசிப்பதானால், அவர் NSW ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும் என்று நவம்பர் முதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தினால் அடுத்த நிதியாண்டில் NSW அரசுக்கு கூடுதலாக 53 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.

 —————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Raysel
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
இந்திய ஓட்டுனர் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் NSW இல் கார் ஓட்டும் சோதனையில் வெற்றிபெற வேண்டும் | SBS Tamil