எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் பலவகைப்பட்ட Parking அபராதத்தொகை குறைக்கப்படவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.
அபராதம் சம்பந்தமாக வாகன ஓட்டிகளுக்கு grace period எனப்படும் சலுகைக் காலம் வழங்குதல் மற்றும் கவுன்சில்கள் தமது விருப்பப்படி குறைந்தளவு அபராதத்தொகை விதித்தல் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 1ம் திகதியிலிருந்து நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கீழ்க்காணும் 10 சந்தர்ப்பங்களுக்கான அபராதம் 25 சதவீதத்தால் அதாவது 80 டொலர்களாக குறைக்கப்படவுள்ளது.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட மேலதிகமாக நீண்ட நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்தல்(Park continuously for longer than permitted)
- டிக்கட் எடுத்து அதனைத் தெரியும்படி வைக்காமல் வாகனத்தை நிறுத்தி வைத்தல்(Park without current ticket displayed)
- டிக்கட் காலாவதியான பின்னும் வாகனத்தை தொடர்ந்தும் நிறுத்தி வைத்திருத்தல்.(Park after ticket expired)
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடவும் கூடுதலான நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்தல்.(Stand vehicle in an area longer than allowed)
- வாகன நிறுத்தத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்தல்.(Stop in the restricted parking area)
- மீட்டர் காலாவதியான பின்னும் வாகனத்தை நிறுத்தல்.(Park after meter expired)
- அடையாளமிடப்பட்ட பகுதிக்குள் வாகனத்தை நிறுத்தி வைக்காமலிருத்தல்.(Not stand a vehicle in marked parking space)
- டிக்கட் எடுக்க வேண்டிய loading zone-இல் உங்களது டிக்கட் காலாவதியான பின்னும் வாகனத்தை நிறுத்தி வைத்திருத்தல்.(Remain in ticket-operated loading zone after ticket expired)
- Loading zone டிக்கட் இல்லாமல் வாகனத்தை நிறுத்தி வைத்தல்.(Park without current loading zone ticket)
- மீட்டருக்குரிய பணம் செலுத்தாமல் வாகனத்தை நிறுத்தி வைத்தல்.(Park without paying meter fee)
தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆகக்குறைந்த Parking அபராதமாக 110 டொலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
