தெற்கு ஆஸ்திரேலியாவில் விடுதி தனிமைப்படுதலை முடித்துக்கொண்டு விக்டோரியா மாநிலத்தில் Wollert பகுதிக்கு திரும்பிய 30 வயதுகளில் உள்ள நபருக்கு கடந்த செய்வாய்க்கிழமை கோவிட் தொற்று கண்டறியப்பட்டதனை தொடர்ந்து விக்டோரியாவிற்கான நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லை கட்டுப்பாட்டு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்குள் நுழையும் விக்டோரியாவிற்கு பயணித்து வீடு திரும்பும் நியூ சவுத் வேல்ஸில்வாசிகளும் விக்டோரியாவாசிகளும் விக்டோரியா மாநில அரசு அறிவித்துள்ள அம்மாநிலத்தின் கோவிட் தொற்று பரவல் ஏற்பட்டிருக்ககூடும் என பட்டியலிடப்பட்டுள்ள இடங்களுக்கு கடந்த வாரம் பயணித்திருக்கவில்லை என ஒப்புதல் படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.
மே 12 புதன்கிழமை காலை 6 மணி முதல் இப்புதிய எல்லை கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த ஒப்புதல் படிவத்தை ServiceNSW appஇல் பெற்றுக்கொள்ளலாம்.
விக்டோரியா மாநில சுகாதார இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இடப்பட்டியல் பின்வருமாறு
- Altona North
- Craigieburn
- Docklands
- Epping
- Melbourne
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
