SKIP TO MAIN CONTENT

NSW மாநில ஓட்டுநர்களுக்கு புதிய டிஜிட்டல் லைசன்ஸ்!

Digital Driving License
A consumer using a new app that the state government wants to roll out using digital licences across NSW. Source: NSW Government

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம்-Digital licence  அறிமுகப்படுத்தப்படுகின்றது.

Digital licence நடைமுறை பரீட்சார்த்த முயற்சியாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Albury, Dubbo ஆகிய பிரதேசங்களில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.  

இந்தப்புதிய நடைமுறையின் பிரகாரம் அனைத்து நியூ சவுத் வேல்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கும் digital சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளநிலையில் இதனைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது அவரவர் விருப்பத்தேர்வுக்கு விடப்பட்டுள்ளது.

இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் தங்களது கைத்தொலைபேசியில் Service NSW app-செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக சாரதி அனுமதிப்பத்திரம் அந்த செயலிக்கு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

பொலீஸார் வாகனங்களை எழுந்தமானமாக நிறுத்தும்போது, தங்களது digital சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காட்டுவதற்காக பொலீஸார் கேட்கும்வரைக்கும் வாகன ஓட்டுநர்கள் கைத்தொலைபேசியை தொடக்கூடாது என்றும் பொலீஸாரின் சோதனைக்கு வசதியாக வாகன ஓட்டுநர்கள் தங்களது கைத்தொலைபேசிகளை எப்போதும் போதுமான charge-உடனும் தொலைபேசியின் திரையில் கீறல்கள் இல்லாமல் பேணிக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய digital சாரதி அனுமதிப்பத்திரத்தை தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now