SKIP TO MAIN CONTENT

NSW மாநில pokie சூதாட்ட லாபம் $6.5 பில்லியன். பிஜி நாட்டின் மொத்த வருமானத்திற்கு சமம்!

NSW மாநில pokie சூதாட்ட லாபம் $6.5 பில்லியன். பிஜி நாட்டின் மொத்த வருமானத்திற்கு சமம்!

Poker machine
Source: Wikimedia

2 min read

Published

By Raysel


Skip to article content

சூதாட்டத்தின் மூலம் சூதாடிகள் லாபம் பெறுவதைவிட சூதாட்ட நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பது உலகெங்கும் தொடர்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மாநிலமான NSW மாநிலத்தில் Poker machine எனப்படும் இயந்திரம் வழி ஆடப்படும் சூதாட்டம் மூலம் கேளிக்கை விடுதிகள் (pubs & clubs) லாபம் சம்பாதிப்பது கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.    

NSW மாநிலத்தில் Poker machine எனப்படும் இயந்திரம் வழியாக மக்கள் சூதாடுவதன் மூலம் கேளிக்கை விடுதிகள் (pubs & clubs) கடந்த நிதியாண்டில் மட்டுமே ஈட்டிய லாபம் $6.5 பில்லியன் ஆகும். அருகாமை நாடான பிஜி நாட்டின் மொத்த ஓராண்டு வருமானமே $6.6 பில்லியன் டாலர்தான். இந்த ஒப்பீட்டில் NSW மாநிலத்தில் Poker machine  வழியாக கேளிக்கை விடுதிகள் (pubs & clubs) சம்பாதித்திருக்கும் கொழுத்த லாபம் ஒரு நாட்டின் வருமானமளவு இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதே வேளையில் ஏழை மக்கள் இப்படி தங்களின் வருமானத்தை சூதாட்டம் வழியாக இழப்பது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ளவைத்துள்ளது.  

NSW மாநிலத்தில் Poker machine எனப்படும் இயந்திரங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மொத்த Poker machine  இயந்திரங்களின் எண்ணிக்கையிலிருந்து கடந்த ஆண்டு 506 இயந்திரங்கள் குறைக்கப்ப்பட்டன. இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கையிலிருந்தும் 42 கேளிக்கை விடுதிகள் குறைக்கப்பட்டன. ஆனாலும் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 91,000 Poker machine இயந்திரங்களின் வழியாக $6.5 பில்லியன் டாலர் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த லாபம் கடந்த  ஆண்டைவிட 5.5 சதம் அதிகமாகும்.

NSW மாநிலத்தில் Mt Pritchard எனுமிடத்திலுள்ள Mounties, Bankstown Sports Club, Lidcombe எனுமிடத்திலுள்ள Dooleys, Flemington எனுமிடத்திலுள்ள Markets Hotel, Casula எனுமிடத்திலுள்ள Cross Roads Hotel, Canley Heights எனுமிடத்திலுள்ள El Cortez Hotel ஆகியன Poker machine இயந்திரம் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கும் கேளிக்கை விடுதிகள் (pubs & clubs) என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.  மேலும்,  குறிப்பாக  Strathfield, Canterbury மற்றும்  Sydney City எனும் நகர சபைகளில் இயங்கும் கேளிக்கை விடுதிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன.

கேளிக்கை விடுதிகளில் சுமார் 67 லட்சம்பேர் சூதாடுவதாக கணக்கிடப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now