SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் Digital சாரதி அனுமதிப்பத்திரம் நடைமுறைக்கு வந்தது!

NSW digital driver licence
NSW digital driver licence Source: AAP Image/Supplied/NSW Government

1 min read

Published

Updated


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம்-Digital driver licence அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பரீட்சார்த்த முயற்சிகளை  அடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதிற்கும் Digital சாரதி அனுமதிப்பத்திரம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து  Digital அனுமதிப்பத்திர App-செயலியை சுமார் 50 ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய நடைமுறையின் பிரகாரம் அனைத்து நியூ சவுத் வேல்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கும் Digital அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளநிலையில் இதனைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது இப்போதைக்கு அவரவர் விருப்பத்தேர்வுக்கு விடப்பட்டுள்ளது.

இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் தங்களது கைத்தொலைபேசியில் "Service NSW" செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக சாரதி அனுமதிப்பத்திரம் அந்த செயலிக்கு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

பொலீஸார் வாகனங்களை எழுந்தமானமாக நிறுத்தும்போது, தங்களது Digital சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காட்டுவதற்காக பொலீஸார் கேட்கும்வரைக்கும் வாகன ஓட்டுநர்கள் கைத்தொலைபேசியை தொடக்கூடாது என்றும் பொலீஸாரின் சோதனைக்கு வசதியாக வாகன ஓட்டுநர்கள் தங்களது கைத்தொலைபேசிகளை எப்போதும் போதுமான charge-உடனும் தொலைபேசியின் திரையில் கீறல்கள் இல்லாமலும் பேணிக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய degital சாரதி அனுமதிப்பத்திரத்தை தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now