SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் பள்ளி சீருடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம்!

school uniform
school students Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் பள்ளி சீருடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளில் primary மற்றும் secondary பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவிகள் விரும்பினால் skirts-பாவாடைக்கு பதிலாக shorts-காற்சட்டை அல்லது pants-நீளக் காற்சட்டை சீருடையை அணிந்துவரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை மாநில Premier Gladys Berejiklian இன்று வெளியிட்டார்.

தற்போதைய நடைமுறையின்படி, மாணவிகள் pants அல்லது shorts அணிந்துவருவதை அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் குறித்த மாநிலத்திலுள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் அனைத்து அரச பாடசாலைகளும் இப்புதிய மாற்றத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்படுவர்.

கடந்த மார்ச் மாதம் குயின்ஸ்லாந்து மாநில அரசு அங்கு கல்விகற்கும் மாணவிகள் skirts, dresses-உடன் pants அல்லது shorts அணிந்துவரலாம் என சீருடைக் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்திருந்த நிலையில், தற்போது நியூசவுத் வேல்ஸ் மாநில அரசு இம்மாற்றத்தை அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now