நியூ சவுத் மாநில மாணவர்கள் எதிர்வரும் ஜனவரி 1ம் திகதியிலிருந்து 100 டொலர் Active Kids voucher-உடன் சேர்த்து மேலதிகமாக Creative Kids Rebate ஊடாக 100 டொலர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொழி, சங்கீதம் மற்றும் நடன வகுப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு பதிவுசெய்ததற்கான செலவு உட்பட பாடசாலை செயற்பாடுகளுக்கு புறம்பான செயற்பாடுகளுக்கென இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இவ்விரு கொடுப்பனவுகள் ஊடாக குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் தலா 200 டொலர்களை வருடமொன்றுக்கு பெற்றுக்கொள்ளமுடியும்.
உதாரணத்திற்கு இரண்டு பிள்ளைகளையுடைய குடும்பம் ஒன்று வருடத்திற்கு 400 டொலர்களை இதனூடாக சேமிக்க முடியுமென நியூ சவுத் வேல்ஸ் மாநில கருவூலக்காப்பாளர் Dominic Perrottet தெரிவித்தார்.
Creative Kids Rebate குறித்த மேலதிக விபரங்கள் Service NSW இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை Service NSW centre ஒன்றுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது இணையத்தளமூடாகவோ பெற்றோர் இந்த மானியத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.