மனைவிக்கு ஊசி மூலம் நஞ்சூட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்தியப் பின்னணிகொண்ட nurse-மருத்துவ தாதி ஒருவரை சிட்னி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் ஜூலை இரண்டாம் திகதிவரைக்கும் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்கு சிட்னி Hebersham பிரதேசத்தில் Dale Grove என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சம்பவம் இடம்பெற்ற அன்று குறிப்பிட்ட பெண் தனது உடலில் அசாதாரணநிலையை உணர்ந்திருக்கிறார். உடனே, தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு கணவரிடம் கேட்டிருக்கிறார். தற்போதைய கொரோனா தொற்றுக்காலத்தில் வைத்தியசாலைக்கு போவது பாதுகாப்பானது அல்ல என்று கூறிய அவரது கணவர் மனைவிக்கு சேலைன் மூலம் வீட்டில் வைத்து மருந்து ஏற்றிவிட்டிருக்கிறார்'- என்று தெரிவிக்கப்படுகிறது.
மருந்து ஏற்றப்பட்டு எட்டுமணிநேரமாக மயக்கநிலையிலிருந்த குறிப்பிட்ட பெண், செவ்வாயிரவு அரைமயக்கத்தில் எழுந்துள்ளார். தனக்கு ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக அவசரசேவைக்கு அழைத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்து குறிப்பிட்ட பெண்ணை சோதனை செய்தபோது அவர் நஞ்சூட்டப்பட்டது தெரியவந்துள்ளது.உடனடியாக அங்கு பொலீஸார் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, குறிப்பிட்ட பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த புதன்கிழமை, இவருக்கு எதிராக பொலீஸார் நான்கு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்கள். குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது 19 வருட திருமணவாழ்வில் இப்படியொரு துரோகம் இடம்பெற்றிருக்கிறது என்று தன்னால் நம்பமுடியவில்லை என்றும் நடந்த இந்த சம்பவத்தை நினைத்தால் அருவருப்பாக உள்ளது என்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.
