SKIP TO MAIN CONTENT

சட்டவிரோத ஆயுத விற்பனை: 700 துப்பாக்கிகளுடன் NSW-இல் ஒருவர் கைது!

NSW police
Source: NSW Police

1 min read

Published


Skip to article content

முறையற்ற ஆயுத விற்பனைகளை மேற்கொண்டார் என்பது உட்பட 28 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டு சுமார்  700 துப்பாக்கிகளுடன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆயுத முகவர் ஒருவர் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் The Marra பகுதியில் இந்த கைது இடம்பெற்றது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 69 வயது நபர், பதிவு செய்யப்பட்ட ஆயுத முகவரென்றபோதும், இவர் ரொக்கட் லோஞ்சர்கள் உட்பட சட்டவிரோத ஆயுதங்களை, அவற்றை வைத்திருப்பதற்கு தகுதிபெறாதவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணை மறுக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now