SKIP TO MAIN CONTENT

NSW மாநில இரயில் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்தம்

சிட்னி மற்றும் NSW இரயில் தொழிலாளர்கள் ஒரு நிறுவன உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள வாக்களித்துள்ளனர் என்று அவர்களுடைய தொழிற்சங்கம் கூறுகிறது.

Transport Sydney Trains
Ther bitter dispute between transport unions and the NSW government has come to an end. Source: AAP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP



Skip to article content

பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த, ஊதிய உய்ர்வு குறித்த ஒப்பந்தம் மிகக் குறைந்த் வாக்கு வித்தியாசத்துடன் ரயில் தொழிலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  ரயில், டிராம் மற்றும் பஸ் ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) NSW மற்றும் சிட்னி ரயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நிறுவன ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.  ஊதியம் குறித்து இருந்து வந்த இழுபறி 24-மணி நேர பணிப்புறக்கணிப்பு நடக்கும் என்ற அறிவித்தல் வரை போயிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சிட்னி ரயில் ஊழியர்களில் 52 சதவீதமானவர்களும் NSW ரயில் ஊழியர்களில் 50.8 சதவீதமானவர்களும் புதிய உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பலர் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்பதையே, மிகக் குறைவான வாக்கு வித்தியாசம் எடுத்துக்காடுகிறது என்று தொழிற்சங்க Alex Claassens கூறினார்.

புதிய ஒப்பந்தத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மூன்று சதவீத ஊதிய உயர்வு, அனைவருக்கும் $1,000 ஒருமுறை வழங்கப்படும், மற்றும் ஊழியர்களுக்கு இலவச பஸ் பயணம் என்பவற்றை உள்ளடக்கியது.

இந்த உடன்படிக்கை இனி Fair Work Commission ஆய்வு செய்வதற்கு அனுப்பிவைக்கப்படும்.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now