COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
- விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1608 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் மரணமடைந்தனர். கோவிட் தொற்றுடன் 374 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர், அவர்களில் 77 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விக்டோரியர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு சுற்று கோவிட் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
- New South Wales மாநிலத்தில் புதிதாக 6394 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுடன் 458 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர், அவர்களில் 52 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- NSW-இல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆகக்குறைந்தது ஒரு சுற்று தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுள்ளனர். 93.5 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
- டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ACT- இல் புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 714 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
