நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் Northern beaches பகுதியில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை Northern beaches பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான கோவிட் கட்டுப்பாடுகள் ஆகக்குறைந்தது ஜனவரி 9ம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக Premier Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க சிட்னியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை மீறிய பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக Boxing Day அன்று North Bondi பகுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் சுமார் 40 பேர்வரை கலந்துகொண்டதாகவும் இவர்களில் பலர் பொலிஸார் அங்கு சென்றபோது தப்பியோடிவிட்டதாகவும் ஏனைய 11 பேருக்கு தலா 1000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிட்னிபெருநகரில் வீடுகளினுள் 10 பேருக்குமேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
