கொரோனா காலத்தில் மாநிலம் தழுவிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருந்தபோதும் மார்ச் மாதம் மட்டும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 51 ஆயிரத்து 716 போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிவப்பு சமிக்ஞை விளக்கினை மதிக்காமல் சென்றது உட்பட வேகமான வாகன ஓட்டிகளினால் நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசுக்கு சுமார் 2 கோடி 9 லட்சம் டொலர்கள் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு வருடகாலத்தில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் அறவிட்ட அதிகூடிய மாதாந்த போக்குவரத்து தண்டப்பணம் இதுவாகும் என்று மாநிலத்தின் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
மார்ச் மாதத்திற்கு முன்பான சாதாரண சூழ்நிலையிலேயே ஒருகோடி 57 லட்சம் டொலர்கள்தான் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களின் மூலம் அறவிடப்பட்டிருக்கிறது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கூடுதலான குற்றங்கள் வேகமான வாகன ஓட்டிகளினாலேயே இழைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களிடம் மாத்திரம் ஒரு கோடி 36 லட்சம் டொலர்கள் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
