SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தை மாற்ற அரசு திட்டம்!

நியூ சவுத் வேல்ஸ் மாநில பள்ளிக்கூடங்கள் தொடங்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக Premier Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

Back to school
Primary school students return back to school in Sydney, Tuesday, February 1, 2022. Source: AAP

2 min read

Published


Skip to article content

தற்போது நடைமுறையிலுள்ள 9am- 3pm பள்ளி நேரமானது மிகப் பழமையான ஒன்று எனவும், மாறிவரும் உலகிற்கேற்ப நாமும் மாறவேண்டியது அவசியம் எனத் தான் கருதுவதாகவும் Premier Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கைகளில் உதவவென, பெண் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், இக்குழு பள்ளி நேரத்தை மாற்றுவது தொடர்பிலான ஆலோசனைகளையும் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 7am- 1pm வரையான நேரம் உட்பட புதிய பள்ளி நேரங்கள் முன்மொழியப்பட்டு, இவை நடைமுறைச் சாத்தியமா என்பது தொடர்பில் ஆராயப்படுமெனவும், இப்பரீட்சார்த்த முயற்சியில் பங்கேற்க விரும்பும் பாடசாலைகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சார்த்த முயற்சி இவ்வாண்டு மூன்றாம் தவணையிலிருந்து ஆரம்பிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றியளிக்கும்பட்சத்தில், புதிய பள்ளி நேரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும், ஆனால் இதற்கு கால அவகாசம் தேவை எனவும் Premier Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

இதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள சில பாடசாலைகள் ஏற்கனவே வெவ்வேறு நேரங்களில் ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now