வெளிநாட்டிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் திரும்பிய நபர் ஒருவர் தனது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக்கொண்டபோது(14வது நாள்) மேற்கொள்ளப்பட்ட கோவிட் சோதனையில் எதிர்மறையான முடிவு கிடைத்ததாகவும், இவர் வீடு திரும்பிய பின்- 16வது நாளன்று மேற்கொண்ட சோதனையில் குறைந்தளவு வீரியம்கொண்ட கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலிலிருந்து வீடு திரும்புபவர்கள் 16வது நாளன்று மற்றுமொரு கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுகின்றமைக்கு அமைவாக இந்நபர் சோதனையை மேற்கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர் குறித்த நபர் பயணம் செய்த இடங்களுக்குச் சென்றவர்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
- Headlands Hotel, Headland Ave and Yuruga St, Austinmer — Tuesday, February 2, 1:00pm-3:00pm
- Bulli Beach Cafe, 68 Trinity Row, Bulli — Saturday, February 6, 1:30pm-4:00pm.Mootch & Me, 313 Bay St,
- Brighton Le Sands — Tuesday, February 2, 10:54am-12:00pm
- Optus, 17 Flinders St, North Wollongong — Thursday, February 4, 1:00pm-1:15pm
- Officeworks, 145 Princes Highway, Fairy Meadow — Thursday, February 4, 3:45pm-4:05pm; Friday, February 5, 2:10pm -3:00pm
பின்வரும் இடங்களுக்குச் சென்றவர்கள் தமது உடல்நிலையை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- Woolworths, 5-9 Molloy St, Bulli — Wednesday, February 3, 9:50am and 10:50am
- Corrimal Memorial Park, Wilga St, Corrimal — Wednesday, February 3, 12:00pm-1:00pm
- Thirroul Beach — Wednesday, February 3, 3:00pm-4:30pm
- Sublime Point Walking Track, 661 Princes Highway, Madden Plains — Thursday, February 4, 8:30am-10am
- Figtree Grove Shopping Centre, in particular Australia Post, Kmart, Blooms The Chemist, Subway; 19 Princes Highway, Figtree — Thursday, February 4, 2:00pm-3:30pm
- Fedora Pasta Factory, 10 Daisy St, Fairy Meadow — Friday, February 5, 3:30pm-3:35pm
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
