Murray ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சில எல்லையோர நகரங்களில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் உள்ள மாநில அவசர சேவைகள் கேட்டுக் கொண்டுள்ளன.
Old Deniliquin Road, Barnes Road, Holmes Street, Warden Street, Council Street, Victoria Street, Moama Street மற்றும் East Moama, Cadell Street ஆகிய இடங்களில் வசிப்பவர்களை இன்று (அக்டோபர் 19) மாலை 5 மணிக்குள் வெளியேறுமாறு NSW SES கேட்டுக் கொண்டுள்ளது.
Kirchhofer தெருவில் உள்ள Moama Pavilionஇல் Evacuaiton மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எல்லையோர நகரங்களான Barmah மற்றும் Lower Moiraவில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு விக்டோரியா SES கேட்டுக் கொண்டுள்ளது.
42 Robertson தெருவில் உள்ள Nathalia சமூக விளையாட்டு மையத்தில் அவசரகால நிவாரண மையத்தை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் Echuca மற்றும் Echuca கிராமத்தின் பகுதிகளுக்கும் இதேபோன்ற வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
NSW மற்றும் விக்டோரியாவின் எல்லையில் Murray நதியின் நீர்மட்டம் 1993 வெள்ளத்தின் போது பதிவு செய்யப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடை பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியா அரசு $73.5 மில்லியன் ஆரம்பக்கட்ட நிதியுதவியை அறிவித்துள்ளது.
Shepparton வடமேற்கில் உள்ள Nathaliaவில் வெள்ள நீரில் இறந்த 65 வயது நபரின் குடும்பத்திற்கு விக்டோரிய Premier Daniel Andrews "ஆழ்ந்த இரங்கலை" தெரிவித்தார்.
வெள்ளம் தொடர்பாக கடந்த ஏழு நாட்களில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இதுவாகும்.
விக்டோரியா மாநிலத்தில் தற்போது 14 நிவாரண மையங்களும், 40 மணல் மூட்டை சேகரிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன என Premier Daniel Andrews தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள் மற்றும் தகவல்களுக்கு VicEmergency செயலியைப் பதிவிறக்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Echuca, Shepparton, Rochester, Seymour மற்றும் greater Bendigo பிராந்தியத்தில் 300க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினர் அவசர சேவைகளுக்கு உதவுகிறார்கள்.
குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Bureau of Meteorology, NSW SES, VIC SES ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
