சிட்னியில் பள்ளி மாணவருக்கு Omicron தொற்று! சமூகப்பரவல் ஆரம்பித்துள்ளதாக அச்சம்!!

In this photo illustration, a medical syringe and two vials are seen in front of the text Omicron COVID-19 in the background. (Photo by Pavlo Gonchar / SOPA Images/Sipa USA)

Illustration of medical syringe and two vials are seen in front of the text Omicron COVID-19 in the background. (Photo by Pavlo Gonchar / SOPA Images/Sipa USA) Source: Sipa USA Pavlo Gonchar / SOPA Images/Sipa

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron சமூக பரவல் ஆரம்பித்திருக்கலாம் என சுகாதாரத்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இன்றையதினம் மேற்கு சிட்னியிலுள்ள Regents Park Christian School மாணவர் ஒருவருக்கு Omicron தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒன்பதாவது நபர் இவர் ஆவார்.

குறித்த மாணவர் வெளிநாட்டுப் பயணம் எதுவும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும், ஏற்கனவே Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இந்த மாணவருக்கு சமூகப் பரவல் மூலமே Omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுவதாக சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் குறித்த மாணவருடன் கல்விகற்கும் மேலும் இருவருக்கும் நோய் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இவ்விரு மாணவர்களது கோவிட் சோதனை முடிவு விரைவில் கிடைக்கும் எனவும் அமைச்சர் Brad Hazzard  மேலும் தெரிவித்தார். 

இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது.

நேற்று இரவு Omicron தொற்றுக்குள்ளான எட்டாவது நபர் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் நவம்பர் 28ம் திகதி சிங்கப்பூரிலிருந்து சிட்னியை வந்தடைந்திருந்த நிலையில், இந்த விமானத்தில் வந்த அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதுடன் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 337 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாநிலத்திலுள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.6 வீதமானோர் ஆகக்குறைந்தது ஒரு சுற்று தடுப்பூசியையேனும் போட்டுக்கொண்டுள்ள அதேநேரம் 92.6 வீதமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


3 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now