SKIP TO MAIN CONTENT

Nurofen மாத்திரை வாங்கியவர்களுக்கு நஷ்டஈடு!

Nurofen
Source: Nurofen

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

Nurofen மருந்து தயாரிக்கும் நிறுவனம், வெவ்வேறு வலிகளுக்கான நிவாரணி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட மருந்தினை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சுமார் 3.5 மில்லியன் டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

Nurofen என்ற பெயரில் விற்கப்படும் ஒரே வலி நிவாரணி மாத்திரையை, பல விலைகளில், பல பெயரில் விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட Nurofen மருந்து தயாரிக்கும் Reckitt Benckiser நிறுவனம், இந்த மாத்திரைகளை கடைகளிலிருந்து திரும்பப் பெறவும், செய்த தவறுக்கு அபராதம் கட்டவேண்டும் என்றும் கடந்த 2015 இல் ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முதுகுவலிக்கான Nurofen மாத்திரை, மாதவிடாய் கால வலிக்கான Nurofen மாத்திரை, தீராத தலைவலிக்கான Nurofen மாத்திரை, உளைச்சல் தலைவலிக்கான Nurofen மாத்திரை என்று Nurofen மாத்திரையில் அடங்கியிருக்கும் அதே 342 மில்லிகிராம் ibuprofen lysine மருந்தையே, இப்படி பல பெயர்களில் இந்நிறுவனம் விற்றது என்றும், அதே வேளையில் Nurofen மாத்திரையை விட விலையையும் கூட்டி விற்பனை செய்து வந்தது என்றும், இந்த விலை பிற வலி நிவாரணி மருந்தைவிட இருமடங்கு அதிகம் என்றும், Australian Competition and Consumer Commission கூறியதை நீதிமன்றம் ஏற்று, Nurofen மாத்திரை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில் Nurofen மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட Class action எனப்படும் கூட்டு சட்டநடவடிக்கையினையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடாக 3.5 மில்லியன் டொலர்களைத் வழங்குவது என்ற இணக்கப்பாட்டுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது.

இப்பணம் 2011 ஜனவரி முதல் - 2015 டிசம்பருக்கு இடையிலான காலப்பகுதியில், வெவ்வேறு வலிகளுக்கான நிவாரணி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டNurofen மாத்திரைகளை வாங்கியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதில் நீங்களும் ஒருவர் என்றால் nurofenclassaction.com.au/register என்ற இணைப்பில் உங்கள் பெயரைப் பதிவுசெய்யலாம்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now